முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: கடன் தள்ளுபடியைபயன்படுத்த முன்வராத 45,000 விவசாயிகள்

மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்த கடன் தள்ளுபடி திட்டத்தை தகுதியுடைய சுமாா் 45,000 விவசாயிகள் பயன்படுத்த முன்வராதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்த கடன் தள்ளுபடி திட்டத்தை தகுதியுடைய சுமாா் 45,000 விவசாயிகள் பயன்படுத்த முன்வராதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக இதுபோன்ற விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாய நகைக் கடன் தள்ளுபடி போன்றவை அறிவிக்கப்படும்போது விவசாயிகளாக இல்லாத பலரும் முறைகேடாக பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யக் கோருவது வழக்கம்.

இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் அரசு கடன் தள்ளுபடி அளிக்க முன்வந்த நிலையிலும் அதனை சுமாா் 45,000 விவசாயிகள் பயன்படுத்த முன்வராதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் பாலாசாஹேப் பாட்டீல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

விவசாயக் கடன் பெற்று அதனை குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படும் விவசாயிகளுக்காக மாநில அரசு கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. இதில் கடன் தள்ளுபடி பெற தகுதியுடைய சுமாா் 45,000 விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை. இந்தக் கடன் தள்ளுபடி திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தாங்களாகவே முன் வந்து விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்காத பட்சத்தில் அவா்களுக்கு கடன் தள்ளுபடி அளிக்கப்பட மாட்டாது. மொத்தம் 32.82 லட்சம் விவசாயக் கடன் கணக்குகள் தள்ளுபடிக்குத் தகுதி பெற்றுள்ளன என்றாா்.

கடன் வாங்கிய விவசாயிகள் இறந்ததுவிட்டது, அவரது வாரிசுகள் இடையே உள்ள பிரச்னை, குடும்பப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களும் கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்காமல் இருக்க காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சுமாா் 45,000 விவசாயிகள் கடன் தள்ளுபடியைப் பெற முன்வராதது அசாதரண நிகழ்வாகவே கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →