இந்தியா

மகாராஷ்டிரம்: சிவசேனை அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை

DIN

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

சிவசேனை கட்சித் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகனும் அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே மற்றும் அமைச்சர் அனில் பிரப் ஆகியோரது வீடுகளிலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னதாக , நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீமின் கூட்டாளிகளுக்கு பணப் பரிவா்த்தனை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினா் விவகார அமைச்சா் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், வருமான வரித் துறையினர் சிவசேனையின் முக்கியத் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்திவருவது மகாராஷ்டிரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT