இந்தியா

சுமியில் சிக்கிய 35 பேர் இன்றிரவு இந்தியா திரும்ப வாய்ப்பு: மாநில அரசு

உக்ரைனின் சுமி நகரில் சிக்கிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 35 பேர் இன்றிரவு இந்தியா திரும்ப வாய்ப்புள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா புதன்கிழமை தெரிவித்தார். 

DIN

உக்ரைனின் சுமி நகரில் சிக்கிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 35 பேர் இன்றிரவு இந்தியா திரும்ப வாய்ப்புள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா புதன்கிழமை தெரிவித்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரா, 

இதுவரை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். 

ம.பி.யைச் சேர்ந்த சிலர் சுமி நகரில் வடகிழக்கு உக்ரைனில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சுமார் 35 மாணவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து பத்திரமாக வெளியேறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

இந்த மாணவர்கள் புதன்கிழமை இரவுக்குள் இந்தியாவை அடைவார்கள் என்று மாநில அரசின் செய்தியாளர்கள், அமைச்சர் கூறினார். 

மேலும், அனைவரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளனர். அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளனர். உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்ற ஆபரேஷன் கங்கா நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். 

தில்லி திரும்பும் மாணவர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கவும், மாநிலத்தில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லவும் மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT