இந்தியா

அழகான மேம்பாலத் தூண்களால் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்க முடியாது: ஒமர் அப்துல்லா

காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகரில் போக்குவரத்து மேலாண்மை குறித்து ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார். 

DIN

காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகரில் போக்குவரத்து மேலாண்மை குறித்து ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, 

அழகான மேம்பாலத் தூண்களுக்கு ஓவியம் தீட்டுவதால் சாலைகளில் குழப்பம் தீர்ந்துவிடாது, ஸ்ரீநகரில் போக்குவரத்து மேலாண்மை தனக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. 

நகரத்தின் மிகப்பெரிய பிரச்னைகளைத் தீர்க்க புதிய உள்கட்டமைப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 

இன்றைய நாட்களில் ஸ்ரீநகர் நகரின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாகப் போக்குவரத்து மேலாண்மை உள்ளது. 

மேலும், ராம்பாக் மேம்பாலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு தேவையான எந்த நடவடிக்கையும், புதிய உள்கட்டமைப்புக்கும் முதலீடு செய்யப்படுவதையும் நான் பார்க்கவில்லை என்று ஒமர் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT