முகப்பு
இந்தியா

உ.பி., உத்தரகண்ட், மணிப்பூரில் பாஜக முன்னிலை: 10 மணி நிலவரம்

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

Updated On : 10 மார்ச், 2022 at 12:05 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காலை 10 மணி நிலவரப்படி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

மணிப்பூரில் பாஜக 25, காங்கிரஸ் 12, என்.பி.பி. 10, பிற கட்சிகள் 13 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

உத்தரகண்டில் பாஜக 43, காங்கிரஸ் 23, பிற கட்சிகள் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் 350 தொகுதிகளுக்கு முன்னிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக 236, சமாஜ்வாதி 100, பகுஜன் சமாஜ் 6, காங்கிரஸ் 4, பிற கட்சிகள் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.