தேர்தல் பின்னடைவு: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட சோனியா முடிவு
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | எந்தத் திரைப்படம் பார்க்கலாம்? விமர்சனத்திற்குள்ளான காங்கிரஸ் எம்பி
உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. பஞ்சாபில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்கிறது. ஆம் ஆத்மி அங்கு அதிகாரத்துக்கு வரவுள்ளது.
இதுதவிர உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் பின்னடைவையே சந்தித்துள்ளது.
இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
"5 மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக அமைந்துள்ளது. ஆனால், மக்கள் ஆசியைப் பெறத் தவறிவிட்டோம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்."