சித்து 
இந்தியா

'பஞ்சாப் மக்களின் கட்டளையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்' - நவ்ஜோத் சிங் சித்து ட்வீட்

பஞ்சாப் மக்களின் கட்டளையை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

DIN

பஞ்சாப் மக்களின் கட்டளையை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது

இதில் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருவதனால் அங்கு ஆம் ஆத்மி ஆட்சி உறுதியாகியுள்ளது. 

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் தங்கள் தொகுதிகளில் பின்னடைவில் உள்ளனர். 

இந்நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி குறித்து  மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'மக்களின் குரலே கடவுளின் குரல். பஞ்சாப் மக்களின் கட்டளையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள்!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT