கார்த்திக் சிதம்பரம் 
இந்தியா

எந்தத் திரைப்படம் பார்க்கலாம்? விமர்சனத்திற்குள்ளான காங்கிரஸ் எம்பி

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டுள்ள கருத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

DIN

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டுள்ள கருத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில் பஞ்சாப் தவிர்த்த மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி பஞ்சாப்பில் ஆட்சியை இழந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியுள்ள காங்கிரஸ் கட்சி உத்தரகண்ட் மற்றும் கோவாவில் குறைவான இடங்களையே பெற்றுள்ளது. தோல்விக்கு மத்தியில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்திக் சிதம்பரம் தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள கருத்துக்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

அவர் தனது சுட்டுரைப் பதிவில், “இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க வேண்டிய படங்களின் பரிந்துரைகளை வழங்குங்கள்” என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து வரும் வேளையில் அக்கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் பதிவு பொறுப்பற்ற தன்மையில் இருப்பதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT