இந்தியா

கரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் விமானப் பயணிகள் எண்ணிக்கை

IANS


புது தில்லி : கரோனா பேரிடருக்கு முந்தைய நிலையை விமானப் பயணிகள் எண்ணிக்கை எட்டியிருப்பதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா தெரிவித்துள்ளார்.

கரோனா பேரிடருக்கு முன்பு, நாள்தோறும் பயணிக்கும் விமானப் பயணிகளின் சராசரி 4 லட்சம். கடந்த டிசம்பர் மாதத்தில், அந்த சராசரி 3.83 லட்சமாக இருந்தது. எனவே, நாம் கரோனாவுக்கு முந்தைய நிலையை மிக விரைவாக எட்டி வருகிறோம் என்று மத்திய அமைச்சர் நம்பிக்கை அளித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட பல துறைகளில் விமானப் போக்குவரத்துத் துறையும் ஒன்றாக இருந்தது. இந்தக் காலக்கட்டங்களில் ஒரு நாளைக்கு பயணம் செய்யும் விமானப் பயணிகளின் சராசரி 1.60 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT