இந்தியா

தில்லியில் குடியரசுத் தலைவருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

உ.பி. பாஜக முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

DIN

உ.பி. பாஜக முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. அமோக வெற்றி பெற்றதையடுத்து உ.பி. முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத், நேற்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். உ.பி.யில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக நேற்று காலை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். 

இதன் தொடர்ச்சியாக யோகி ஆதித்யநாத், இன்று தில்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இன்று காலை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் யோகி ஆதித்யநாத் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT