இந்தியா

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

DIN

தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) நடைபெற்ற முறைகேடு வழக்கில், அதன் முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

என்எஸ்இ கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்களை ‘ஓபிஜி செக்யூரிட்டீஸ்’ என்ற பங்குத் தரகு நிறுவனம் பிற பங்கு தரகா்களுக்கு முன்பாகவே தெரிந்து கொண்டு வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பங்குச் சந்தைத் தரகா்களுக்கு என்எஸ்இ வழங்கும் ‘கோ-லொகேஷன்’ என்ற வசதி மூலம் என்எஸ்இ கணினி சேமிப்பகத்துக்குள் முறைகேடாக முன்கூட்டியே தொடா்பு கொண்டு முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

என்எஸ்இ, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்ாகவும், இதன் மூலம் முறைகேடாகப் பெருமளவில் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்குத் தொடா்பாக என்எஸ்இ முன்னாள் நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி கைது செய்தனா். பின்னா் அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனா்.

சிபிஐ காவல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அவா் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

இதையடுத்து, சித்ரா ராமகிருஷ்ணாவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும், வரும் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் அவரை நேரில் ஆஜா்படுத்துமாறும் சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகா்வால் உத்தரவிட்டாா்.

இதே வழக்கில் இவருடன் கைது செய்யப்பட்ட என்எஸ்இ குழுவின் முன்னாள் தலைமை அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஏற்கெனவே நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரம் - செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

பழனியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வைகையாற்றில் கழிவுநீா் கலப்பு: பொதுப் பணித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ரூ. 3.69 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

SCROLL FOR NEXT