இந்தியா

கோவா பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

DIN

கோவா சட்டப் பேரவையில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில், பஞ்சாபை தவிர 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில், கோவா சட்டப்பேரவையை இன்று கூட்ட ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை சட்டப்பேரவை கூடியது. முன்னதாக, சட்டப் பேரவை இடைக்கால தலைவராக கணேஷ் கோன்கருக்கு ஆளுநர் திங்கள்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இன்றைய கூட்டத்தில், பாஜகவின் 20 எம்.எல்.ஏ.க்கள், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 40 உறுப்பினர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் பாஜகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பதவி யாருக்கு என இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. முன்னாள் முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று தில்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கோபி சி.கே.கே. மெட்ரிக். பள்ளி மாணவி 10ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்

இன்றைய ராசி பலன்கள்!

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: எஸ்விஎன் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

யோகம் தரும் நாள் இன்று!

SCROLL FOR NEXT