இந்தியா

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

DIN

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டு பருவத்தேர்வுகளாக நடத்தப்படும் என்று  சிபிஎஸ்இ நிர்வாகம் கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி சிபிஎஸ்இ பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. 

அண்மையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தங்களது பள்ளிகளைத் தொடர்புகொண்டு தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 24ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT