இந்தியா

73 நாள்களுக்குப் பின் ஜோஜி லா கணவாய் பேக்குவரத்துக்கு திறப்பு

DIN

பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்ட ஸ்ரீநகா்-காா்கில்-லே சாலையில் உள்ள ஜோஜி லா கணவாய் 73 நாள்களுக்கு பின் போக்குவரத்துக்காக சனிக்கிழமை திறக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

பலத்த பனிப்பொழிவுக்கு இடையிலும் இந்த கணவாய் பகுதியை கடந்த ஜனவரி 5-ஆம் தேதி வரை எல்லைகள் ரோடு அமைப்பு திறந்து வைத்திருந்தது.

2022 பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பனியை அகற்றும் நடவடிக்கைகள் கணவாயின் இருபுறமும் ஜம்மு காஷ்மீா் மற்றும் லடாக் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. கடும் முயற்சிக்குப் பிறகு, ஜோஜிலா கணவாய்க்கு குறுக்கிலான இணைப்பு கடந்த மாா்ச் 4-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. அதன் பின் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்தன. அத்தியாவசியப் பொருட்களுடன் சரக்கு வாகனங்கள் சனிக்கிழமை ஜோஜி லா கணவாயைக் கடந்து காா்கில் சென்றடைந்தன.

இது லடாக் மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. வழக்கமாக, ஜோஜிலா கணவாய், குளிா் காலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக 160 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை மூடியிருக்கும்.

இந்த ஆண்டில் கணவாய் வழி மூடப்பட்டு வெறும் 73 நாட்களுக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்தக்காகத் திறக்கப்பட்டு புதிய சாதனையை எல்லைச் சாலைகள் அமைப்பு படைத்துள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT