கால்பந்து போட்டியின்போது சரிந்த பெஞ்சுகள் 
இந்தியா

கால்பந்து போட்டியின்போது சரிந்த பெஞ்சுகள்...பதற வைக்கும் விடியோ

கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி சரிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

DIN

கேரளம் மலப்புரத்தில் மைதானம் ஒன்றில் கால்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி சரிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில், ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மலப்புரத்தில் உள்ள பூங்கோடு மைதானத்தில் இரவு 9 மணி அளவில் கால்பந்து போட்டி தொடங்கவிருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்தது. சம்பவம் நடைபெற்ற பிறகு, போட்டி ஏற்பாட்டாளர்கள் உள்பட பலர் அங்கு விரைந்தது விடியோவில் பதிவாகியுள்ளது. அதேபோல், மக்கள் அச்சத்தில் ஓடுவதையும் விடியோவில் காணலாம்.  

சம்பவத்தின்போது காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளம் மலப்புரத்தில் உள்ளூர் கால்பந்து போட்டிகள் மிக பிரபலம். ஆயிரக்கணக்கான மக்கள் இதை பார்ப்பதற்கு வருவதுண்டு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT