இந்தியா

இபிஎஃப்ஓ அமைப்பில் ஜனவரியில் 15.29 லட்சம் பேர் சேர்ப்பு: டிசம்பரை விட அதிகம்!

DIN

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 15.29 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜனவரி மாதம் 2.69 லட்சம் சந்தாதாரர்கள் கூடுதலாக இணைந்துள்ளனர்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தற்காலிக, ஊதிய தரவு விவரங்கள் இன்று (மார்ச் 20) வெளியிடப்பட்டுள்ளன. 

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனவரி மாதம் சேர்ந்த சந்தாதாரர்கள் 15.29 லட்சம் பேரில், 8.64 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்தவர்கள்.  சுமார் 6.65 லட்சம் பேர், பணி மாறுதல் காரணமாக வெளியேறி மீண்டும் இணைந்தவர்கள்.

வயது வாரியாக ஒப்பிடுகையில், 18 முதல் 25 வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் 6.90 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இது ஜனவரி மாதம் சேர்ந்த மொத்த உறுப்பினர்களில் 45.11 சதவிகிதம் ஆகும்.  இது முதல் முறையாக வேலை தேடுபவர்கள், அமைப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களில் அதிகளவில் சேர்ந்துள்ளதையே காட்டுகிறது.

மாநில வாரியாக ஒப்பிடுகையில் மகாராஷ்டிரம், ஹரியாணா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 9.33 லட்சம் பேர் கடந்த ஜனவரி மாதம் சேர்ந்துள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் சேர்ந்த மொத்த உறுப்பினர்களில் 61 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

விசாரணைக்காக போலீஸாா் அழைத்து சென்ற இளைஞரின் உறவினா்கள் போராட்டம்

துறையூா் அருகே வாகனம் மோதி மான் உயிரிழப்பு

கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்றவா் கைது

பாலியல் துன்புறுத்தல்: தந்தைக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT