இந்தியா

35,000 தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய முடிவு: பஞ்சாப் முதல்வர்

DIN

பஞ்சாபில் தற்காலிக அரசுப் பணியாளர்களாக இருக்கும் 35 ஆயிரம் பேரை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரியளவிலான வெற்றியை பதிவு செய்த ஆம் ஆத்மி ஆட்சி அமைத்துள்ளது. மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இன்று பகவந்த் மான் வெளியிட்ட அறிவிப்பில்,

“பஞ்சாப் மாநிலத்தில் குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவுகளில் பணிபுரிந்து வரும் 35,000 தற்காலிக பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இனி வரும் காலங்களில் தற்காலிக ஒப்பந்த முறையிலும், வெளி நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்யும் முறைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு தலைமைச் செயலாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT