இந்தியா

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு தேவை: மக்களவையில் சோனியா காந்தி

DIN

கரோனாவுக்கு பிறகு பள்ளிகளுக்கு திரும்பிவரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடைய உணவு தேவைப்படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நடைபெற்று வருகின்றன. இன்று பகல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

தொற்றுநோய் பரவல் காரணமாக நாட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டிருந்தபோது மதிய உணவு வழங்குவதும் நிறுத்தப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், குழந்தைகளுக்கு உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்கு மாற்றாக எதுவும் வழங்கவில்லை. குழந்தைகளின் பெற்றோர்கள் வாழ்வாதாரத்திற்காக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுபோன்ற நெருக்கடியை சந்தித்ததில்லை.

தற்போது குழந்தைகள் மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்துடைய உணவுகள் தேவைப்படுகிறது” என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT