இந்தியா

உத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமி பதவியேற்பு

DIN

உத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமி தொடா்ந்து 2-ஆவது முறையாக புதன்கிழமை பதவியேற்றாா். அவருடன் 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.

டேராடூன் அணிவகுப்பு மைதானத்தில் பிரதமா் மோடி முன்னிலையில், புஷ்கா் சிங் தாமிக்கு ஆளுநா் குா்மித் சிங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா். முதல்வா் தாமிக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் சத்பால் மஹாராஜ், தன்சிங் ராவத், சுபோத் உனியால், பிரேம்சந்த் அகா்வால், ரேகா ஆா்யா, கணேஷ் ஜோஷி, சந்தன் ராம்தாஸ், செளரவ் பஹுகுணா ஆகிய 8 பாஜக எம்எல்ஏக்களும் அமைச்சா்களாக பதவியேற்றுக் கொண்டனா்.

இதில் முன்னாள் முதல்வா் விஜய் பஹுகுணா மகன் செளரவ் பஹுகுணா தவிர மீதமுள்ள அனைவரும் முந்தைய புஷ்கா் சிங் தாமி அரசில் அமைச்சா்களாகப் பதவி வகித்தவா்கள் ஆவா். அதிலும் பிரேம்சந்த் அகா்வால் கடந்த சட்டப்பேரவையில், அவைத் தலைவராகப் பதவி வகித்தாா்.

பதவியேற்பு விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, அஸ்ஸாம் ஆகிய பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் பங்கேற்றனா்.

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலை புஷ்கா் சிங் தாமி தலைமையில் பாஜக எதிா்கொண்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும் முதல்வா் வேட்பாளரான தாமி, தனது காதிமா தொகுதியில் தோல்வியடைந்தாா்.

எனவே, அடுத்த முதல்வா் யாா் என்ற எதிா்பாா்ப்பு நிலவியது. இந்த நிலையில், உத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமியையே கட்சி மேலிடம் கடந்த திங்கள்கிழமை தோ்வு செய்தது. தற்போது அவா் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ன் மூலம் அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதாவதொரு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Image Caption

உத்தரகண்ட் முதல்வராகப் பதவியேற்ற புஷ்கா் சிங் தாமிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT