கோப்புப்படம் 
இந்தியா

பிகார் அரசு விழாவில் உணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

பிகார் திவாஸ் விழாவில் மதிய உணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

DIN

பாட்னா: பிகார் திவாஸ் விழாவில் மதிய உணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிகார் திவாஸ் கொண்டாட்ட விழா செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) நடைபெற்றது. பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாணவர்களின் உடல்நலக்குறைவு குறித்து பாட்னா சுகாதாரத் துறை அதிகாரி மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

கரோனா தொற்றுப்பரவல் காரணமாக பிகார் திவாஸ் விழா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

1068 எபிசோடுகளுடன் முடிவடைந்த மாரி தொடர்!

தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT