முகப்பு
இந்தியா

இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

இன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இச்சந்திப்பிற்கு பிறகு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலையும் சந்திக்கிறார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பகிர்:

புது தில்லி: இன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இச்சந்திப்பிற்கு பிறகு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலையும் சந்திக்கிறார்.

பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பிறகு பகவந்த் மான் செல்லும் முதல் தில்லி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பகவந்த் மான் மார்ச் 16-ல் ஷஹீத் பகத் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கட்கர் கலான் கிராமத்தில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து கொண்டார்.

முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானின் முக்கிய அறிவிப்புகளில் ஒன்றான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை உதவி எண் 9501200200 தொடங்கப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை வென்று மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. 

முழு கட்டுரையைப் படிக்க →