இந்தியா

ஹிஜாப் விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம்: உச்ச நீதிமன்றம்

DIN

வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு தடை விதித்தது. இதற்கு ஆதரவாக கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்வுகள் தொடங்கவிருப்பதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஹிஜாப் வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரிய வழக்கறிஞரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. இஸ்லாமிய மாணவி ஆயிஷாத் ஷிஃபா சார்பு வழக்கறிஞர் தேவ்தத் காமத்தை, கடிந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, "இந்த விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம்" என கேட்டு கொண்டார்.

"தேர்வுக்கு செல்லும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மார்ச் 28ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கவிருப்பதால் நிர்வாகம் மாணவிகளை அனுமதிக்கவில்லை எனில் ஓராண்டு முழுவதும் மாணவிகள் இழக்க நேரிடம்" என தேவ்தத் காமத் வாதம் முன்வைத்தார். இதற்கு பதிலளித்த ரமணா, "தேர்வுக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பில்லை. இதை பரபரப்பாக்க வேண்டாம்" என்றார். 

கடந்த மார்ச் 16ஆம் தேதி, ஹோலிக்கு பிறகு ஹிஜாப் குறித்து வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்பு கொண்டது. முன்னதாக, மார்ச் 15ஆம் தேதி, வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு தடை விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குறிப்பாக, இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஹிஜாப் அணிவது அவசியான மத நடைமுறை அல்ல என்றும் நீதிமன்றம் விளக்கம் அளித்தது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT