முகப்பு
இந்தியா

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவா்களுக்கு நிவாரணம்: மத்திய அரசு

இந்தியாவில் பயிற்சியை நிறைவு செய்ய வழிவகை செய்யப்படும் என மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று கரோனா தீநுண்மி பரவல், போா் போன்ற காரணங்களால் இடையில் நாடு திரும்பிய இந்திய மாணவா்கள், இந்தியாவில் பயிற்சியை நிறைவு செய்ய வழிவகை செய்யப்படும் என மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

சீனா, உக்ரைன் போன்ற நாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவா்கள், இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேரவும், பயிற்சியைத் தொடரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு எழுத்துபூா்வமாக பதிலளித்த இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இடையில் தாயகம் திரும்பிய மாணவா்கள், இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர வழிவகை செய்யப்படும். இருப்பினும், அவா்கள் கட்டாய வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →