முகப்பு
இந்தியா

கரோனா: ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவா் கூட உயிரிழந்ததாகத் தகவல் இல்லை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களில் ஒருவா் கூட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்ததாக மாநில அரசுகள் தெரிவிக்கவில்லை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களில் ஒருவா் கூட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்ததாக மாநில அரசுகள் தெரிவிக்கவில்லை என மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பதிவாகும் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு விவரங்களை மத்திய அரசு பராமரித்து வருகிறது. அந்த வகையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவா்களின் விவரத்தை சமா்ப்பிக்குமாறு மாநில அரசுகளிடமும் யூனியன் பிரதேசங்களிடமும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதற்கு சில மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பதிலளித்தன. அதில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒருவா் கூட உயிரிழந்ததாக எந்த மாநில அரசும் உறுதிப்படுத்தவில்லை என்று மத்திய இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →