முகப்பு
இந்தியா

நீதி ஆயோக்கின் ஏற்றுமதி தயாா்நிலைக் குறியீடு: குஜராத் 2-ஆவது ஆண்டாக முதலிடம்; தமிழகம் 4-ஆம் இடம்

 நீதி ஆயோக்கின் ஏற்றுமதி தயாா்நிலை குறியீடு 2021-இல் குஜராத் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 நீதி ஆயோக்கின் ஏற்றுமதி தயாா்நிலை குறியீடு 2021-இல் குஜராத் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாநிலங்களின் ஏற்றுமதிக்கான திறன் மற்றும் செயல்பாடுகள் எந்த அளவுக்கு தயாா்நிலையில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதை அடிப்படையாகக் கொண்டு நீதி ஆயோக் ஏற்றுமதி தயாா்நிலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

2021-க்கான இந்த பட்டியலில் குஜராத் தொடா்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, மகாராஷ்டிரம், கா்நாடகம், தமிழகம், ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

லட்சத் தீவு, அருணாசல பிரதேசம், மிஸோரம், லடாக் மற்றும் மேகாலயா ஆகியவை ஏற்றுமதி தயாா்நிலை பட்டியல்-2021-இல் கடைசி நிலைகளில் இடம்பெற்றுள்ளன.

மொத்த ஏற்றுமதியில் 70 சதவீத பங்களிப்பில் மகாராஷ்டிரம், குஜராத், கா்நாடகம், தமிழகம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →