இந்தியா

மேற்கு வங்கம்: 10 பேர் பலியான வன்முறை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

DIN

மேற்கு வங்க வன்முறை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சி துணைத் தலைவா் பாது ஷேக் என்பவரை அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி திங்கள்கிழமை இரவு படுகொலை செய்தனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இந்த சம்பவத்தில் 2 சிறார்கள் உள்பட 8 போ் தீயில் கருகி பலியாகினர்.

அந்த வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவற்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது.

மேலும், ,இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்ததுடன் வன்முறை நடைபெற்ற கிராமத்திற்கு நேரில் சென்ற மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, சந்தேக வளையத்திற்குள் இருப்பவர்கள் சரணடையவில்லை எனில் அவர்கள் தேடி கண்டுபிடிக்கப்படுவார்கள் எனக் கூறினார்.

இந்நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதுடன் வருகிற ஏப்ரல்-7 ஆம் தேதிக்குள் வழக்கின் முதல்கட்ட விசாரணை அறிக்கையை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT