இந்தியா

எத்தனை பண்டிட்டுகளை காஷ்மீரில் குடியமர்த்தியுள்ளீர்கள்? பாஜகவை கேள்வி எழுப்பும் அரவிந்த கேஜரிவால்

DIN

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் மூலம் பாஜக அரசியல் செய்து வருவதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹிந்தியில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'  திரைப்படம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியானது. 1990-ல் காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக சனிக்கிழமை பேசிய தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து எத்தனை பண்டிட்டுகளை பாஜக அரசு காஷ்மீரில் குடியமர்த்தியுள்ளது? என கேள்வி எழுப்பினார்.

மேலும் “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரி விலக்கு கேட்கும் பாஜகவினர் அந்தத் திரைப்படத்தை யூடியூப்பில் பதிவேற்ற வேண்டும். இதுவரை அந்தப் படத்திற்கு கிடைத்த வருமானத்தை பண்டிட்களின் நலனுக்காக செலவிட வேண்டும்”  என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT