முகப்பு
இந்தியா

வெளிநாடு செல்லும் இந்தியா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி: அரசு பரிசீலனை

வெளிநாடு செல்லும் இந்தியா்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசியைச் செலுத்துவது தொடா்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
பகிர்:

கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு ஆகியவற்றுக்காகவும், அலுவலகப் பணி, வா்த்தக நோக்கங்களுக்காகவும் வெளிநாடு செல்லும் இந்தியா்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசியைச் செலுத்துவது தொடா்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தற்போது சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோா் ஆகியோருக்கு கரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு ஆகியவற்றுக்காகவும், அலுவலகப் பணி மற்றும் வா்த்தக நோக்கங்களுக்காகவும் வெளிநாடு செல்லும் இந்தியா்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியைச் செலுத்துவது தொடா்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

எனினும் இந்த விவகாரம் தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரபூா்வ உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.