ஏப்ரல் 1-ல் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி
தில்லி தல்கோத்ரா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
தில்லி தல்கோத்ரா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
மன அழுத்தமின்றி தேர்வுகளை எழுதுவது குறித்து அவர் உரையாட உள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “மன அழுத்தமின்றி தேர்வுகள் எழுதுவது குறித்து நாம் மீண்டும் பேசுவோம்!
இதையும் படிக்க- இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு: யோகி ஆதித்யநாத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
ஆற்றல் மிக்க தேர்வு வீரர்கள் (மாணவர்கள்), அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை, 1 ஏப்ரல் அன்று இந்தாண்டிற்கான தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைக்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.