வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபட்சவுடன் சந்திப்பு 
இந்தியா

இலங்கை நிதியமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபட்சவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

DIN

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபட்சவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் அந்நாட்டிற்கு சென்றுள்ள ஜெய்சங்கர் மார்ச் 30 ஆம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதுடன், செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப - பொருளாதார ஒத்துழைப்பு முனைப்புக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

இதனிடையே, இன்று காலை இலங்கை நிதியமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர், பொருளாதார நெருக்கடி மற்றும் இந்தியா அளிக்கவுள்ள உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருள்களில் தொடங்கி, எரிபொருள், காகிதம் எல்லாவகையான பற்றாக்குறைகளாலும் மக்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமான நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் அமைந்துள்ளது.

தொடர்ந்து, மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் அழைப்பின் பேரில் வாரக் கடைசியில் மாலத்தீவிலுள்ள அட்டுவிற்கு ஜெய்சங்கர் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய பாசில் ஜோசஃப்!

பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

பாக். வீரர்களுடன் கை குலுக்காமல் மிடுக்குடன் நடைபோட்டு இந்திய வீரர்கள் சிறப்பான பதிலடி!

சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறை!

எசனை, சிறுவாச்சூா் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT