இந்தியா

கேரளத்தில் எப்படி இருக்கிறது வேலை நிறுத்தம்: முழு பார்வை

PTI


திருவனந்தபுரம்: நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்  கேரளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனல பலரையும் பாதிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மாா்ச் 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாா்ச் 30-ஆம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தன. 

இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளும், கட்சி சாா்ந்த தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடின.

டிரக்குகள், லாரிகள் உள்ளிட்ட வணிக ரீதியிலான வாகனங்களும் முழுமையாக இயக்கப்படாமல், பொது வேலைநிறுத்தத்துக்கு முழு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பால், செய்தித்தாள் விநியோகம், மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ்கள் வழக்கம் போல இயங்கின.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பது என்னவென்றால், சில இடங்களில் போராட்டக்காரர்கள், தனியார் நிறுவனங்களுக்குச் சென்ற ஊழியர்களை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு ஊர்களிலிருந்து திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்தில் இறங்கி, அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்குச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்தவர்களுக்கு காவல்துறையினர் வாகன வசதி செய்து கொடுத்தனர்.

இந்த பொது முடக்கத்தில், கேரளத்தில் உள்ள பாரதிய மஸ்தூர் சங் அமைப்பைத் தவிர அனைத்து தொழிலாளர் சங்கங்களும், கட்சிகளும் பங்கேற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT