அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 எனப் பதிவாகி உள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 எனப் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வடக்கு அந்தமானின் திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோ மீட்டர் தொலைவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.4 அலகுகளாகப் பதிவானது
Advertisement
Advertisement
இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகவோ, பொருள் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.