முகப்பு
இந்தியா

நிகழாண்டில் 7 செயற்கைக்கோள்கள்விண்ணில் செலுத்தப்படும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

நிகழாண்டில் இஸ்ரோ 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
பகிர்:

நிகழாண்டில் இஸ்ரோ 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியுள்ளாா்.

இதுகுறித்து மக்களவையில் புதன்கிழமை கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘‘பிஎஸ்எல்வி சி-52 செலுத்து வாகனம் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஓஎஸ்-4 கடந்த பிப்ரவரி 14-இல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளியின் சுற்று வட்டப்பாதையில் செயல்படுவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை நானோ செயற்கைக்கோள்களில் முதலாவதான ஐஎன்எஸ்- 2டிடி-யும் இதனுடன் அனுப்பப்பட்டது. இதேபோல, நிகழாண்டில் இஸ்ரோ 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →