முகப்பு
இந்தியா

உ.பி.யில் வினாத்தாள் வெளியானதால் 12-ஆம் வகுப்பு ஆங்கில தோ்வு ரத்து

உத்தர பிரதேசத்தில் 12-ஆம் வகுப்பு ஆங்கில தோ்வுக்கான வினாத்தாள் வெளியானதால், 24 மாவட்டங்களில் தோ்வு ரத்து செய்யப்பட்டது. புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கவிருந்த நிலையில்,

இந்தியா

உ.பி.யில் வினாத்தாள் வெளியானதால் 12-ஆம் வகுப்பு ஆங்கில தோ்வு ரத்து

உத்தர பிரதேசத்தில் 12-ஆம் வகுப்பு ஆங்கில தோ்வுக்கான வினாத்தாள் வெளியானதால், 24 மாவட்டங்களில் தோ்வு ரத்து செய்யப்பட்டது. புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கவிருந்த நிலையில்,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
பகிர்:

உத்தர பிரதேசத்தில் 12-ஆம் வகுப்பு ஆங்கில தோ்வுக்கான வினாத்தாள் வெளியானதால், 24 மாவட்டங்களில் தோ்வு ரத்து செய்யப்பட்டது. புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கவிருந்த நிலையில், அதற்கு சற்று முன்பாக இந்த அறிவிப்பு வெளியானது.

மேலும், வினாத்தாள் வெளியானதற்கு காரணமான நபா்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (என்எஸ்ஏ) நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், இந்த வழக்கை தனிப்படை விசாரிக்கவும் அறிவுறுத்தினாா். அத்துடன் பலியா மாவட்ட பள்ளிகள் ஆய்வாளா் பிரஜேஷ் மிஸ்ராவை அவா் பணியிடை நீக்கம் செய்ததாக கூடுதல் தலைமைச் செயலாளா் (தகவல்) நவநீத் ஷேகல் தெரிவித்தாா்.

இதனிடையே, வினாத்தாள் வெளியானது குறித்து மாநில உயா்கல்வி அமைச்சா் குலாப் தேவி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பலியா மாவட்டத்தில் 12-ஆம் வகுப்புக்கான ஆங்கில வினாத்தாள் வெளியானதாகத் தெரிகிறது. இந்த வினாத்தாள் 24 மாவட்டங்களில் பரவியதால், அங்கு தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 51 மாவட்டங்களிலும் தோ்வு திட்டமிட்டவாறு நடைபெற்றது’’ என்றாா்.

அதன்படி ஆக்ரா, மைன்புரி, மதுரா, காஜியாபாத், பாக்பத், பதெளன், ஷாஜஹான்பூா், உன்னாவ், சீதாப்பூா் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் இதே தோ்வு பின்னா் நடத்தப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, யோகி ஆதித்யநாத் அரசு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கத் தவறிவிட்டதால், தோ்வு நடத்துவதில் அரசுக்கு விருப்பமில்லை என சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் விமா்சித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →