தில்லியில் முதல்வர் ஸ்டாலின்; பிற்பகல் 1 மணிக்கு பிரதமருடன் சந்திப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு தனி விமானத்தில் தில்லி சென்றார். இன்று பிற்பகல் 1 மணிக்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக நேற்றிரவு விமானத்தில் தில்லி சென்றுள்ளார்.
இன்று பிற்பகல் 1 மணிக்கு அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நீட் விலக்கு, தமிழகத்துக்கு நிதி உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
தில்லியில் ஏப்ரல் 2-ஆம் தேதி திமுக அலுவலகம் திறப்பு விழாவிற்கும் பிரதமரை அழைக்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது.
தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார்.
திமுக அலுவலக திறப்பு விழா முடிந்த பிறகு அவர் சென்னை திரும்புகிறார்.