இந்தியா

ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று கர்நாடகம் வருகை

2023 -இல் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று கர்நாடகம் வருகிறார்.

DIN

புது தில்லி: 2023 -இல் கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று கர்நாடகம் வருகிறார்.

ராகுல் காந்தி பயணம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக பெங்களூருவில் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் ராகுல் காந்தி. 

"மூத்த தலைவர்கள், கட்சியின் முன்னணி கள பணியாளர்கள், கட்சியின் செயற்குழுவினர் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தும் ராகுல் காந்தி, கர்நாடகம் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கும் செல்கிறார்" என்று கார்கே கூறினார்.

மேலும் டாக்டர் ஸ்ரீ சிவகுமார சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக, காந்தி சாலை வழியாக வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தும்கூரில் உள்ள ஸ்ரீ சித்தகங்கா மடத்திற்குச் செல்கிறார். 

வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் தலைவர் கேபிசிசி அலுவலகத்திற்குச் சென்று முன்னணி நிர்வாகிகளுடனான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்று கார்கே கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு

மீண்டும் நடிக்க வரும் ரம்பா!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!

வேலூரில் விஜய் சொன்ன குட்டிக் கதை!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

SCROLL FOR NEXT