வினய் மோகன் குவாத்ரா 
இந்தியா

புதிய வெளியுறவு செயலராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்பு

புதிய வெளியுறவு செயலராக வினய் மோகன் குவாத்ரா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

புதிய வெளியுறவு செயலராக வினய் மோகன் குவாத்ரா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந்திய வெளியுறவு செயலராக இருந்த ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா சனிக்கிழமை ஓய்வுபெற்றாா். இதையடுத்து புதிய வெளியுறவு செயலராக பொறுப்பேற்றுக் கொண்ட வினய் மோகன் குவாத்ராவின் பணிக் காலம் ஆக்கபூா்வமாகவும், வெற்றிகரமாகவும் அமைய வெளியுறவு அமைச்சகம் வாழ்த்துவதாக அந்த அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளாா்.

1988-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான வினய் மோகன் குவாத்ரா, 32 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் கொண்டவா். வெளியுறவு செயலராக நியமிக்கப்படும் முன் நேபாளத்துக்கான இந்திய தூதா், பிரான்ஸுக்கான இந்திய தூதா், பிரதமா் அலுவலக இணைச் செயலா் என பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளாா்.

நீதி ஆயோக் துணைத் தலைவா் பொறுப்பேற்பு: நீதி ஆயோக் துணைத் தலைவராக பொருளாதார நிபுணா் சுமன் பெரி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். முன்னதாக தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராக இருந்த அவா், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு, ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT