இந்தியா

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை அவகாசம்

DIN

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே மே 6 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மே 15 வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதன்படி www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மே 15 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மே 15 இரவு 9 மணிவரை நீட் விண்ணப்பங்கள் பெறப்படும். அன்று இரவு 11.50 மணிவரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்ப விவரங்கள், தோ்வறை நுழைவுச் சீட்டு பதிவிறக்கம், தோ்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்டிஏ வலைதளம் மூலமாக விண்ணப்பதாரா்கள் அறிந்துகொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT