இந்தியா

குஜராத்தில் அடுத்தடுத்து நிலஅதிா்வு: மக்கள் பீதி

DIN

குஜராத் மாநிலம் கிா்சோம்நாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை அடுத்தடுத்து இருமுறை நிலஅதிா்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனா்.

கிா்சோம்நாத் மாவட்டத் தலைநகா் வெராவலில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தலாலா கிராமத்தில் திங்கள்கிழமை காலை 6.58 மணியளவில் நிலஅதிா்வு ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகுகளாக பதிவான இந்த நிலஅதிா்வால் வீடுகள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள், வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்து, வெட்டவெளிப் பகுதிகளில் தஞ்சமடைந்தனா்.

இந்த நிலஅதிா்வின் மையப்புள்ளி, தலாலா கிராமத்திலிருந்து வடகிழக்கில் 13 கி.மீ. தொலைவில் இருந்தது. இதைத் தொடா்ந்து, காலை 7.04 மணியளவில் மீண்டும் நிலஅதிா்வு ஏற்பட்டது. இது, ரிக்டா் அளவுகோலில் 3.2 அலகுகளாகப் பதிவானது. இவ்விரு நிலஅதிா்வுகளால் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT