கங்கோத்ரி கோயில் நடை திறப்பு  
இந்தியா

கங்கோத்ரி கோயில் நடை திறப்பு 

உத்தரகண்டில் உள்ள புகழ்பெற்ற சார்தாம் கோயில்களில் ஒன்றான கங்கோத்ரி கோயில் நடையை முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று திறந்து வைத்தார். 

DIN

உத்தரகண்டில் உள்ள புகழ்பெற்ற சார்தாம் கோயில்களில் ஒன்றான கங்கோத்ரி கோயில் நடையை முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று திறந்து வைத்தார். 

மக்கள் பாதுகாப்பான, வசதியான யாத்திரையை உறுதி செய்வதற்காக சார் தாம் யாத்ரா செல்லும் வழியில் பக்தர்களுக்கு தனியார் சுகாதார நிறுவனம் வழங்கும் இலவச சுகாதார சேவைகளை திங்களன்று முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

குளிர்காலத்தை முன்னிட்டு கடந்த நவம்பர் 5, 2021ல் கங்கோத்ரி கோயில் நடை அடைக்கப்பட்டன. 

உத்தரகண்ட் அரசின் கூற்றுப்படி,

தினமும் கங்கோத்ரியில் 7 ஆயிரம் யாத்ரீகர்களும், பத்ரிநாத்தில் 15 ஆயிரம், கேதார்நாத்தில் 12 ஆயிரம், யமுனோத்ரியில் 4 ஆயிரம் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஏற்பாட்டை 45 நாட்களுக்கு அரசு செய்துள்ளது. 

கடந்தாண்டைப் போல் கரோனா எதிர்மறை சான்றிதழ் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயமில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென வைரலான சோனியா பாடல்! என்ன காரணம்?

தவெக மாநாட்டில் தொண்டர்கள் மயக்கம்!

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

SCROLL FOR NEXT