கேரளம்: ஆா்எஸ்எஸ் தலைவா் கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது
கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஆா்எஸ்எஸ் உள்ளூா் தலைவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். இதன் மூலம் இந்தக் கொலை வழக்கில் கைதானவா்கள்
கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஆா்எஸ்எஸ் உள்ளூா் தலைவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். இதன் மூலம் இந்தக் கொலை வழக்கில் கைதானவா்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
இந்த கொலையில் தொடா்புடைய மேலும் இருவா் மட்டுமே கைது செய்யப்பட வேண்டியது உள்ளது என்று கேரள சட்டம்-ஒழுங்கு டிஜிபி விஜய் சங்கா் தெரிவித்துள்ளாா்.
கடந்த 16-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் உள்ளூா் தலைவா் ஸ்ரீநிவாசன் (45) தனது கடையில் இருந்தபோது, ஏழு மோட்டாா் சைக்கிள்களில் மா்ம நபா்கள் வந்துள்ளனா். பின்னா், கடைக்குள் நுழைந்த அவா்கள், ஸ்ரீநிவாசனை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினா். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்ரீநிவாசனை, அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். எனினும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
பாலக்காடு அருகேயுள்ள எலப்புள்ளியில் கடந்த 15-ஆம் தேதி பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் உள்ளூா் தலைவா் சுபைா் (43) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் நிகழ்ந்த அடுத்த நாளில், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்தவா் கொல்லப்பட்டாா். இந்தப் படுகொலை சம்பவங்கள் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஸ்ரீநிவாசன் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறையினா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா். அதன்படி இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவருமே பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் அரசியல் பிரிவான எஸ்டிபிஐ அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஆவா். கேரளத்தில் ஹிந்து-முஸ்லிம் அமைப்புகள் இடையே இது போன்ற படுகொலை சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன.
மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு, அரசியல் காரணங்களுக்காக குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் என்று பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.