முகப்பு
5 ஆண்டுகளுக்குப் பின்.. சொந்த ஊருக்குச் சென்று தாயை சந்தித்த யோகி ஆதித்யநாத்
இந்தியா

5 ஆண்டுகளுக்குப் பின்.. சொந்த ஊர் சென்று தாயை சந்தித்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை உத்தரகண்ட் வந்தார்.

இந்தியா

5 ஆண்டுகளுக்குப் பின்.. சொந்த ஊர் சென்று தாயை சந்தித்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை உத்தரகண்ட் வந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
5 ஆண்டுகளுக்குப் பின்.. சொந்த ஊருக்குச் சென்று தாயை சந்தித்த யோகி ஆதித்யநாத்
பகிர்:

டேஹ்ராடூன்: உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை உத்தரகண்ட் வந்தார்.

உத்தரகண்ட் வந்த யோகி ஆதித்யநாத், பௌரி கர்ஹ்வால் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான பஞ்சூருக்குச் சென்றார்.

அங்கு வசித்து வரும் தனது தாய் மற்றும் தனது குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின் யோகி ஆதித்யநாத் அவரது சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். கடைசியாக அவர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். அவரது தந்தை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரணமடைந்தபோதும் கூட, கரோனா பொதுமுடக்கம் காரணமாக அவர் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் செல்லவில்லை.

நாளை அவர் ஹரித்வாரில், உத்தரப்பிரதேச சுற்றுலாக் கழகம் சார்பில் கட்டப்பட்ட பகிரதி விடுதியை திறந்து வைக்கவுள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →