இந்தியா

எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு: பயங்கரவாதிகள் சதித் திட்டம் முறியடிப்பு

DIN

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் தொடங்கவுள்ள அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் எல்லைகளில் தீவிர சோதனையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்திலுள்ள எல்லைப் பகுதியின் வேலிக்கு அருகில் சுரங்கப்பாதை புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் எல்லைப் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில்,

“சம்பா மாவட்டத்திலுள்ள சர்வதேச எல்லையில் சுரங்கப்பாதையை மே 4ஆம் தேதி எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக தோண்டப்பட்டிருக்கும் 2 அடி அகலமுடைய இந்த சுரங்கம், 150 அடி நீளத்தில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து தோண்டப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததன் மூலம், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்திலிருந்து 21 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 5வது சுரங்கமாகும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT