இந்தியா

மத நல்லிணக்கத்தை எடுத்துரைத்த மற்றொரு சம்பவம்; தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய சகோதரிகள்

DIN

இறந்துபோன தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்து மதத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ரமலான தொழுகை மேற்கொள்வதற்காக இஸ்லாமியர்களுக்கு வழங்கியுள்ளனர். இந்த செயல் இஸ்லாமியர்களின் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மதக்கலவரங்கள் வெடித்துவரும் நிலையில், இந்து மதத்தை சேர்ந்த சகோதரிகளின் செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உத்தரகண்ட் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் காசிப்பூர் என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை சேர்ந்த பிரஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகி என்பவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 

இவர், இறப்பதற்கு முன்பு, தன்னுடைய விவசாய நிலத்தை ரமலான் தொழுகைக்கு பயன்படுத்தும் வகையில் இஸ்லாமியர்களுக்கு அளிக்க வேண்டும் என தனக்கு நெருக்கமான உறவினரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதை தனது குழந்தைகளிடம் தெரிவிப்பதற்கு முன்பு, இவர் கடந்த 2003ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். 

இவரது மகள்களான சரோஜ், அனிதா ஆகியோர் தில்லி மற்றும் மீரட்டில் வாழ்ந்துவருகின்றனர். தனது தந்தையின் விருப்பம், அவர்களது உறவினர்கள் மூலம் சகோதரிகளுக்கு சமீபத்தில் தெரியவந்துள்ளது. பின்னர், சகோதரர் ராகேஷ் ரஸ்தோகியை சகோதரிகள் உடனே தொடர்பு கொண்டு இதுகுறித்து கூறியுள்ளனர்.

நிலத்தை இஸ்லாமியர்களுக்கு கொடுப்பதற்கு அவரும் உடனே ஒப்பு கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தந்தையின் கடைசி விருப்பத்தை மதிப்பது எங்கள் கடமை. அவருடைய ஆன்மா சாந்தியடைய என் சகோதரிகள் ஏதோ செய்திருக்கிறார்கள். அதில் எனக்கு சம்மதமே" என்றார்.

ரமலான் தொழுகை கமிட்டியை சேர்ந்த ஹசின் கான் இதுகுறித்து கூறுகையில், "சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இரண்டு சகோதரிகள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு கமிட்டி தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு சகோதரிகளும் அவர்கள் செய்ததற்காக விரைவில் பாராட்டப்படுவார்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT