இந்தியா

ம.பி.யில் அணையில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி: நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். 

DIN

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். 

சிந்த்வாரா மாவட்டத்தில் ஒரு சிறுவன் உள்பட நான்கு பேர் உள்ள மச்சகோரா அணையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் புனர்வாஸ் காலனியில் வசிப்பவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் டிவிட்டர் பதிவில், 

சிந்த்வாராவின் மச்சகோரா அணையில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இதயம் முழுவதும் வேதனையில் உள்ளது. அப்பாவி குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையவும், அந்த குடும்பத்தினருக்கு அந்த வேதனையைத் தாங்கும் வலிமையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன். 
என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மற்றொரு ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT