இந்தியா

3 வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் விண்ணில் பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்

ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை கடந்த மூன்று ஆண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் விண்ணில் பறக்கத் தொடங்கியுள்ளது. 

DIN

ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை கடந்த மூன்று ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விண்ணில் பறக்கத் தொடங்கியுள்ளது. 

கடந்த 2019இல் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடி காரணமாக விமானச் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், ஜலான் கல்ராக் கூட்டமைப்பு தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தில் மறுகட்டமைப்பு திட்டத்தை தாக்கல் செய்து மீண்டும் ஜெட்ஏர்வேஸை இயக்க ஒப்புதல் பெற்றுள்ளனர். 

இந்நிலையில், ஹைதராபாத்தில் நேற்று விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சோதனை விமானம் ஒன்று முதலில் பறக்க செய்தது. சோதனை விமானம் புறப்படுவதைக் காட்டும் விடியோவை விமான நிறுவனம் டிவிட்டரில் பகிர்ந்துள்ளது. 

ஜெட் ஏர்வேஸின் 25வது ஆண்டு நிறைவையொட்டி, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நாளுக்காகக் காத்திருந்து, பிரார்த்தனை செய்துகொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இது உணர்வுப்பூர்வமான நாள். 

மீண்டும் உங்கள் செயல்பாடுகளைத் தொடங்குங்கள் என்று ஜெட் ஏர்வேஸின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT