இந்தியா

கேதார்நாத் கோயில் நடை திறப்பு: முதல்வர் தாமி வழிபாடு

கேதார்நாத் கோயிலின் நடை பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

DIN

கேதார்நாத் கோயிலின் நடை பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் அவரது மனைவி கீதா தாமியும் வழிபாடு மேற்கொண்டனர். 

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலின் நுழைவுவாயில் இன்று திறக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

வேத மந்திரங்கள் முழங்கக் கோயிலின் நடை இன்று திறக்கப்பட்டன. கோயில் முழுவதும் மொத்தம் 15 குவிண்டால் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

சார்தாம் கோயிலில் கங்கோத்ரி, யமுனோத்ரி  கோயில்கள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில், கேதார்நாத் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. தொடர்ந்து இம்மாத 8-ம் தேதி பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT