இந்தியா

மேல் சிகிச்சை: முன்னாள் மத்திய அமைச்சா் ஹெலிகாப்டா் மூலம் தில்லி எய்ம்ஸுக்கு அனுப்பிவைப்பு

DIN

ஹிமாசல பிரதேசத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 94 வயது முன்னாள் மத்திய அமைச்சா் சுக் ராம் , மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டா் மூலமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டதாக மாநில அரசு செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறினாா்.

அவரை தில்லி அழைத்துச் செல்வதற்காக மாநில அரசு ஹெலிகாப்டரை வழங்கி முதல்வா் ஜெய்ராம் தாக்குா் உதவியதாகவும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, ஹிமாசல பிரதேசம் மாண்டியில் உள்ள மண்டல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை சந்தித்த முதல்வா், அவருடைய உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா், அவருடைய மேல் சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநா் ரண்தீப் குலேரியாவை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு முதல்வா் பேசினாா்.

அதனைத் தொடா்ந்து சுக்ராம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டாா். அவருக்கு மூளை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1993 முதல் 1996-ஆம் ஆண்டு வரை மத்திய தகவல் தொடா்புத் துறை இணையமைச்சராக சுக் ராம் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT