கோப்புப்படம் 
இந்தியா

மகனின் கண் முன் அரங்கேறிய கொடூரம்; பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய போலி சாமியார்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவரின் பெற்றோருக்கிடையே உள்ள பிரச்னையை தீர்க்க போலி சாமியாருடன் அந்த பெண் கட்டாயப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

DIN

ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் போலி சாமியார் ஒருவர் திருமணமான பெண்ணை அவரது இரண்டரை வயது குழந்தையின் முன்பு வைத்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமையன்று பூட்டிவைக்கப்பட்ட அறையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குழந்தையையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட போலி சாமியார் தப்பித்து விட்டார். அவரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவரின் பெற்றோருக்கிடையே உள்ள பிரச்னையை தீர்க்க போலி சாமியாருடன் அந்த பெண் கட்டாயப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு, அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு, வரதட்சணை கேட்டு கணவரின் பெற்றோர்கள் துன்புறுத்தி வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

தன்னுடன் அந்த பெண்ணை சில மாதங்கள் தங்க வைத்தால் குடும்ப பிரச்னையை தீர்த்து வைப்பதாக தாந்திரீகம் செய்யும் போலி சாமியார் ஒருவர் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்க, அவரது மாமியார் அவருக்கு மயக்க மருந்தை கொடுத்து போலி சாமியாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

நினைவு திரும்பிய பின்னர்தான் போலி சாமியாரின் அறையில் இருப்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. அவருடன் அவரது குழந்தையும் அடைத்து வைக்கப்பட்டார். இதையடுத்துதான், அந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. குழந்தையின் கண் முன்னே, அந்த பெண்ணை 79 நாள்களாக அந்த போலி சாமியார் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளார். 

ஏப்ரல் 28ஆம் தேதி, அந்த சாமியார் அறையில் அவருடைய போனை வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர். அந்த போன் மூலம் பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் நடந்த அனைத்தையும் எடுத்துரைத்துள்ளார். 

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த போலி சாமியார் தப்பித்துவிட்டார். இதையடுத்து, பாலியல் வன்கொடுமை என பல்வேறு பிரிவுகளின் கீழ் போலி சாமியாருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அவருடைய சகோதரர், பெற்றோரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT