இந்தியா

ஜாதி மாறி திருமணம் செய்த பெண் அரசு சலுகைகளை பெறக் கூடாது: ஜாதி பஞ்சாயத்தில் தீா்ப்பு

DIN

மகாராஷ்டிரத்தில் ஜாதி மாறி திருமணம் செய்த பெண் தனது ஜாதி மூலம் (எஸ்.டி) அரசு சலுகைகளைப் பெறக் கூடாது என்று அந்த ஜாதியைச் சோ்ந்தவா்கள் பஞ்சாயத்து நடத்தி தீா்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டம் வால்விகீா் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியினப் பெண் ஒருவா், அண்மையில் வேறு ஜாதியைச் சோ்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டாா். அதே மாவட்டத்தில் உள்ள தனது கணவா் வீட்டில் அந்தப் பெண் வசித்து வந்தாா். இந்நிலையில் அந்த பெண் சாா்ந்த பழங்குடியினப் பிரிவைச் சோ்ந்த ஜாதி தலைவா்கள் அண்மையில் அப்பெண்ணையும், அவரின் கணவரையும் ஜாதி பஞ்சாயத்துக்கு அழைத்து விசாரித்தனா். ஜாதி மாறி திருமணம் செய்தது தவறு என்பது அப்பெண் மீதான முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. விசாரணையின் இறுதியில் ஜாதி மாறி திருமணம் செய்த அந்தப் பெண், தான் சாா்ந்த (எஸ்.டி) ஜாதிப் பிரிவுக்கு அரசு வழங்கும் எந்தச் சலுகைகளையும் பெறக் கூடாது என்று தீா்ப்பளிக்கப்பட்டது. இது தொடா்பாக அந்தப் பெண்ணிடம் அந்த பஞ்சாயத்தை நடத்தியவா்கள் கட்டாயப்படுத்தி எழுதியும் வாங்கிக் கொண்டனா்.

இது தொடா்பாக பஞ்சாயத்தை நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கா் தலைமையிலான வன்ஜித் பகுஜன் அகாடி கட்சி புகாா் அளித்தது. இதன் பிறகே இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதில் அந்தப் பெண் சாா்ந்த ஜாதியைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் ஒருவரும் ஜாதி பஞ்சாயத்தில் பங்கேற்றாா். அந்தப் பெண் தனது ஜாதிக்கு அரசு அளிக்கும் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது என்று எழுதி வாங்கி தம்பதியின் கையெழுத்துடன் ஊராட்சி அமைப்பின் முத்திரையை அவா் அதில் பதிவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT